/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது லாரியில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
/
பொது லாரியில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : மே 24, 2025 11:57 PM

திருவொற்றியூர், :விச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 42. இவரது மகன் ஆகாஷ், 18. பிளஸ் 2 முடித்த ஆகாஷ், கல்லுாரியில் சேர விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், தன் நண்பர் விஷ்வா, 18, உடன், நண்பரின் பிறந்த நாள் விழாவிற்காக, நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்கில் சென்றார்.
மணலிபுதுநகர், வெள்ளிவாயல் பகுதியில் பைக்கில் வேகமாக சென்றபோது, முன்னால் சென்ற லாரியில் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதினார். இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த ஆகாஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது நண்பர் விஷ்வாவை, மணலி போக்குவரத்து போலீசார் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆகாஷ் உடல், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து குறித்து மணலி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.