தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி 

 ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி 

 ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி 


ADDED : பிப் 20, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொடுங்கையூர், இந்திரா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சகாயம். இவரது மகன் விஜய் ஜோஷுவா, 19. இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், சென்னையில் இருந்து கோயம்புத்துாரில் உள்ள அவரது அத்தை மாலதி என்பவர் வீட்டிற்கு ரப்தி சாகர் விரைவு ரயிலில் பயணித்தார். ரயில் கூட்டமாக இருந்தது.

ஆவடி ரயில் நிலையத்தை கடந்தபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்து விஜய் ஜோஷுவா பரிதாபமாக உயிரிழந்தார். ஆவடி ரயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us