/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் படியில் பயணம் இளைஞர் உயிரிழப்பு
/
ரயில் படியில் பயணம் இளைஞர் உயிரிழப்பு
ADDED : ஜன 29, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லைவேந்தன், 25. இவர், அம்பத்துாரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
வழக்கம்போல, நேற்று காலை அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற புறநகர் ரயிலில், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் ஏறி பயணித்தார். கூட்ட நெரிசல் காரணமாக படியருகே நின்றிருந்தார்.
ரயில், திருவாலங்காடு பகுதியை கடந்தபோது கால் இடறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில், கால்கள் துண்டான நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட அரக்கோணம் ரயில்வே போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

