ADDED : செப் 14, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
ஆவடி: கழிவு நீர் வடிகாலில் பாபு, 38, என்ற வாலிபர், இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருமுல்லைவாயில், மணிகண்டபுரத்தைச் சேர்ந்தவர் பாபு; பெயின்டர். இவரது மனைவி அருணா, 34. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, மணிகண்டபுரத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடந்தது. அங்கு நடந்த கச்சேரியில் நடனமாடிய பாபு, அதன் பின் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், மணிகண்டபுரம் 16வது பிரதான சாலையில் உள்ள திறந்தவெளி கழிவு நீர் கால்வாயில், நேற்று காலை பாபு இறந்து கிடப்பது தெரிய வந்தது.
தகவலறிந்த திருமுல்லைவாயில் போலீசார், பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறிக்கை வந்தபின்னரே, அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
