/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கஞ்சா விற்பதில் தகராறு வாலிபருக்கு வெட்டு
/
கஞ்சா விற்பதில் தகராறு வாலிபருக்கு வெட்டு
ADDED : ஏப் 22, 2025 12:50 AM
மேடவாக்கம், மேடவாக்கம், வெள்ளைக்கல், பெரியார் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம், 27. இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, வீட்டின் அருகில் நின்றிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஜீவானந்தம், கோபால் மற்றும் தீனா ஆகியோர், மாணிக்கத்தை கத்தியால் வெட்டி விட்டு தப்பினர்.
சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர், காயமடைந்த மாணிக்கத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த மேடவாக்கம் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்ததில் மாணிக்கம் மற்றும் ஜீவானந்தத்திற்கு இடையே, கஞ்சா விற்பதில் முன்விரோதம் இருந்தது தெரிந்தது.
இதையடுத்து, தலைமறைவான ஜீவானந்தம் உட்பட நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.