/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முன்விரோதம் வாலிபருக்கு தலையில் வெட்டு
/
முன்விரோதம் வாலிபருக்கு தலையில் வெட்டு
ADDED : மே 15, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எர்ணாவூர்,எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் எட்வின், 36; தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய், 25. இருவருக்கும் சமீபத்தில் ஏற்பட்ட தகராறில், சஞ்சய் குடும்பத்தை பற்றி எட்வின் தரக்குறைவாக பேசியதால், கைகலப்பாக மாறியுள்ளது. அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று மதுபோதையில் வந்த சஞ்சய், எட்வினிடம் தகராறில் ஈடுபட்டு, அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த எட்வினை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வழக்கு பதிந்த எண்ணுார் போலீசார், சஞ்சயை கைது செய்தனர்.