UPDATED : அக் 12, 2026 09:16 PM
ADDED : அக் 12, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
ராயபுரம்: கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற, 21 வயது வாலிபரை, பொதுமக்கள் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ராயபுரம், எஸ்.என்., சாலையில் செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவு 12:45 மணியளவில், மர்ம நபர் ஒருவர், கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயன்றார்.
சத்தம் கேட்டு, அப்பகுதிமக்கள் திரண்டு, வாலிபரை சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர். பின், ராயபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், காசிமேடு, பவர் குப்பத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், 21, என்பதும், மதுபோதையில் திருட முயன்றதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
