/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தண்ணீர் தொட்டியின் மேலிருந்து இடறி விழுந்து வாலிபர் காயம்
/
தண்ணீர் தொட்டியின் மேலிருந்து இடறி விழுந்து வாலிபர் காயம்
தண்ணீர் தொட்டியின் மேலிருந்து இடறி விழுந்து வாலிபர் காயம்
தண்ணீர் தொட்டியின் மேலிருந்து இடறி விழுந்து வாலிபர் காயம்
ADDED : மே 13, 2025 12:40 AM
எம்.ஜி.ஆர்.நகர் :மேற்கு ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகர், இ.வி.கே., சம்பத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக், 39; பிளம்பர். இவர் நேற்று முன்தினம் இரவு, தன் சகோதரர் குமார் மற்றும் மனைவியின் சகோதரர் உதயா ஆகியோருடன், மொட்டை மாடியில் இருந்து, 10 அடி உயரத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மீது அமர்ந்து மது அருந்தினர்.
மது அருந்தி இரும்பு படிக்கட்டு வழியாக தண்ணீர் தொட்டியில் இருந்து, மெட்டை மாடியில் இறங்கினர். அப்போது, எதிர்பாராத விதமாக, கார்த்திக் கால் இடறி மொட்டை மாடியில் விழுந்தார்.
இதில், அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கே.கே.நகர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.