/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக் விபத்தில் காயமடைந்த இளைஞர் பலி
/
பைக் விபத்தில் காயமடைந்த இளைஞர் பலி
ADDED : டிச 12, 2024 12:23 AM
ராமாபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன், 29. இவர், மணப்பாக்கத்தில் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார்.
கடந்த 7ம் தேதி இரவு, தன் தோழியுடன், இருசக்கர வாகனத்தில் மணப்பாக்கம் நோக்கி சென்றார். ராமாபுரம் வள்ளுவர் சாலையில் அரசமரம் ஜங்ஷன் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனத்தில் இருந்து, இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது எதிர் திசையில் வந்த கார், மோகன் மீது மோதியது. இதில் காயமடைந்த மோகனை, அங்கிருந்தவர்கள் மீட்டு கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது தோழி லேசான சிராய்புகளுடன் தப்பினார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று மோகன் உயிரிழந்தார். இது குறித்து, பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் ஓட்டுநரை பரத் என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.