/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ்சில் மோதிய ஸ்கூட்டர் வாலிபர் பலி; 2 பேர் 'அட்மிட்'
/
பஸ்சில் மோதிய ஸ்கூட்டர் வாலிபர் பலி; 2 பேர் 'அட்மிட்'
பஸ்சில் மோதிய ஸ்கூட்டர் வாலிபர் பலி; 2 பேர் 'அட்மிட்'
பஸ்சில் மோதிய ஸ்கூட்டர் வாலிபர் பலி; 2 பேர் 'அட்மிட்'
ADDED : அக் 15, 2024 12:29 AM
உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24; தனியார் நிறுவன தொழிலாளி.
இவர், நேற்று முன்தினம்இரவு 7:00 மணியளவில், 'டியோ' ஸ்கூட்டரில்உத்திரமேரூர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களான நந்தகுமார், 23, ஆகாஷ், 23, ஆகியோருடன் சென்றார்.
மூவரும் தலைக்கவசம் அணியவில்லை. உத்திரமேரூர் அடுத்த குண்ணவாக்கம் கூட்டுச்சாலை அருகே, காஞ்சிபுரம் - நெல்வாய் கூட்டுச்சாலை வரையிலான அரசு பேருந்தின் மீது ஸ்கூட்டர் மோதியது.
இதில், ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நந்தகுமார், ஆகாஷ் ஆகிய இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.