/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுமியுடன் திருமணம் வாலிபர் கைது
/
சிறுமியுடன் திருமணம் வாலிபர் கைது
ADDED : நவ 12, 2024 12:15 AM
குன்றத்துார்,
ஆவடி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்களது 17 வயது மகளை கடந்த 7ம் தேதி, குன்றத்துார் அழைத்துச் சென்றனர். அப்போது அவள் மாயமானதால், குன்றத்துார் காவல் நிலையத்தில் புகார்அளித்தனர்.
விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த 'ஏசி' மெக்கானிக் யுவராஜ்,19, என்பவருடன், சிறுமி வசிப்பது தெரிந்தது.
இதையடுத்து அந்த இளைஞர் மற்றும் சிறுமியை பிடித்து விசாரித்தனர். இதில், 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக யுவராஜுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், பெற்றோருடன் பேருந்தில் குன்றத்துார் வந்த சிறுமியை, யுவராஜ் அழைத்துச் சென்று திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.
இதையடுத்து யுவராஜை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.