/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இலங்கை பெண் கொலை வழக்கு உ.பி.,யில் வாலிபர் சுற்றிவளைப்பு
/
இலங்கை பெண் கொலை வழக்கு உ.பி.,யில் வாலிபர் சுற்றிவளைப்பு
இலங்கை பெண் கொலை வழக்கு உ.பி.,யில் வாலிபர் சுற்றிவளைப்பு
இலங்கை பெண் கொலை வழக்கு உ.பி.,யில் வாலிபர் சுற்றிவளைப்பு
ADDED : ஜூலை 23, 2025 11:59 PM

கொளத்துார், இலங்கை பெண் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை தேடி, போலீசார் உத்தர பிரதேசம் சென்று உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 47; கன்டெய்னர் லாரி ஓட்டுநர். இவரது மனைவி சரஸ்வதி, 38.
கணவருடன் ஏற்பட்ட தகராறில், அவரை பிரிந்த சரஸ்வதி, ஒன்றரை மாதங்களுக்கு முன் இரண்டு மகன்களுடன் கொளத்துார், தனம்மாள் நகர் முதல் தெருவில், வீடு வாடகைக்கு எடுத்து, தையல் வேலை பார்த்து வந்தார்.
மது பழக்கத்திற்கு அடிமையான சரஸ்வதி, சில தினங்களுக்கு முன் மகன்களை கும்மிடிப்பூண்டியில் விட்டு கொளத்துார் வந்துள்ளார்.
அடுத்த இரண்டு நாட்களில், வீட்டில் அழுகிய நிலையில் சரஸ்வதி இறந்து கிடந்தார்.
கொளத்துார் போலீசாரின் விசாரணையில், மது போதைக்கு அடிமையான சரஸ்வதி, சில மாதங்களுக்கு முன் விபசார வழக்கு ஒன்றில் கைதாகி, சிறையில் ஆறு நாள் தண்டனை அனுபவித்து, ஜாமினில் வெளியே வந்தது தெரிய வந்தது.
சரஸ்வதி இறப்பதற்கு முந்தைய நாள் மது போதையில், வாலிபர் ஒருவருடன் உல்லாசமாக இருந்ததும், கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்தது.
காணாமல் போன சரஸ்வதியின் மொபைல்போன் மற்றும் ஸ்கூட்டரை திருடிய வாலிபரை தேடி உத்தர பிரதேசம் சென்ற போலீசார், நேற்று இரவு அவரை கைது செய்தனர்.
பிடிபட்ட வாலிபர் அண்ணா நகரில் தங்கி வேலை பார்த்து வந்த உ.பி.,யைச் சேர்ந்த மொய்ஸீன் அன்சாரி, 38, என்பது தெரிய வந்தது.