/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குற்ற வழக்கில் தேடப்பட்ட வாலிபர் விமான நிலையத்தில் கைது
/
குற்ற வழக்கில் தேடப்பட்ட வாலிபர் விமான நிலையத்தில் கைது
குற்ற வழக்கில் தேடப்பட்ட வாலிபர் விமான நிலையத்தில் கைது
குற்ற வழக்கில் தேடப்பட்ட வாலிபர் விமான நிலையத்தில் கைது
ADDED : ஜன 13, 2024 01:16 AM
சென்னை,
குற்ற வழக்கில் பல மாதங்களாக தேடப்பட்ட அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூமாலை 42. இவர் மீது கடந்த ஆண்டு அரியலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், குற்ற வழக்கு ஒன்று பதிவாகியது. இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பூமாலையை கைது செய்து, விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் பூமாலை போலீசில் சிக்காமல், வெளிநாட்டுக்கு தப்பி சென்று தலைமறை வாகிவிட்டார். அரியலுார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பூமாலையை, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணியரிடம், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரியலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசால், தேடப்படும் தலை மறைவு குற்றவாளியான பூமாலையும், சென்னை திரும்பி வந்தார். அவரின் பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த போது, இவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என தெரியவந்தது. தேடப்படும் தலைமுறை குற்றவாளி பூமாலை, கைது செய்து அரியலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.