/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுநர் உட்பட 4 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது
/
ஓட்டுநர் உட்பட 4 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது
ADDED : டிச 04, 2025 02:16 AM
வளசரவாக்கம்: 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் கார் ஓட்டுநர் மற்றும் நண்பர்களை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
விருகம்பாக்கம் அமராவதி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 32; கார் ஓட்டுநர். இவர் கடந்த 1ம் தேதி இரவு நண்பர்கள் சதீஷ், ரஞ்சித், கணேஷ் மற்றும் நாராயணன் ஆகியோருடன் சேர்ந்து, வளசரவாக்கம் காமராஜர் சாலையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கூடத்தில் மது அருந்தினார்.
அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த நான்கு பேரில் ஒருவர், வெங்கடேசனின் நண்பர் ரஞ்சித்திடம் 'என்ன சத்தம் ஓவராக இருக்கு; நீ என்ன பெரிய ஆளா' எனக்கேட்டு தகராறு செய்து கையால் அடித்தார்.
அவரை தடுக்க முயன்ற வெங்கடேசன் மற்றும் நண்பர்களை, அந்த நான்கு பேரும் மது பாட்டில்கள் மற்றும் கைகளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில், காயமடைந்த வெங்கடேசன், ரஞ்சித், நாராயணன் ஆகியோர் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித் து விசாரித்த வளசர வாக்கம் போலீசார், வளசரவாக்கம் சுப்ரமணிய சாமி நகரைச் சேர்ந்த கிர்த்தி, 23, காமகோடி நகரை சேர்ந்த அருண், 22 அண்ணா தெருவை சேர்ந்த ராஜேஷ்குமா ர், 22 ஆகிய மூன்று பேரை கைது செய்தனர் .

