ADDED : மார் 29, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
பூக்கடை: பூக்கடையில், தொழிலாளியை கத்தியால் வெட்டிய வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
பூக்கடை, தேவராஜ முதலி தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய், 23; கூலித் தொழிலாளி. கடந்த 26ம் தேதி அதே பகுதியில், ரத்தன் பஜார் சாலையில் நடந்து சென்ற போது, மர்ம நபர்கள் வீண் தகராறு செய்து அடித்து தாக்கியுள்ளனர்.
தொடர்ந்து, சஞ்சயை கத்தியால் வெட்டி தப்பி சென்றனர். இதில், காயம் அடைந்த சஞ்சய், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இது குறித்து பூக்கடை போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்கிற ஷாம், 20, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த குபேரன், 19, ஆகியோர், தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
