/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போரூர் மூதாட்டியை கொலை செய்து துாக்கில் தொங்கவிட்ட வாலிபர்கள்
/
போரூர் மூதாட்டியை கொலை செய்து துாக்கில் தொங்கவிட்ட வாலிபர்கள்
போரூர் மூதாட்டியை கொலை செய்து துாக்கில் தொங்கவிட்ட வாலிபர்கள்
போரூர் மூதாட்டியை கொலை செய்து துாக்கில் தொங்கவிட்ட வாலிபர்கள்
ADDED : ஏப் 24, 2025 11:50 PM
போரூர், போரூர், ஆர்.இ., நகரைச் சேர்ந்தவர் காந்திமதி, 71. இவரது வீட்டில் அஜய், 21, என்ற வாலிபர், தாய் மற்றும் சகோதரியுடன் வாடகைக்கு குடியிருந்தார். காந்திமதியின் மகன் பிரேம்சங்கர், மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, தாய் நீண்ட நேரமாகியும் வெளியே வராததையடுத்து, பிரேம்சங்கர் சென்று பார்த்தபோது, வீட்டின் ஹாலில் காந்திமதி துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த போரூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் ஆய்வின்போது, மூதாட்டியின் பின் தலையில் காயம் இருந்தது. அத்துடன், மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது. மேலும், காந்திமதி அணிந்திருந்த 3 சவரன் நகையும் மாயமாகி இருந்தது.
மூதாட்டி ஹாலில் துாக்கில் தொங்கியபடி இருந்ததால், இது கொலையாக இருக்கும் என, போலீசார் விசாரணையை முடுக்கி, அக்கம் பக்கத்தினரிடம் தீவிரமாக விசாரித்தனர்.
அதே நேரம், வாடகைக்கு குடியிருந்த அஜய்யும் மாயமாகி இருந்தார். இதையடுத்து, அஜய் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
அஜய்யின் தாய் மற்றும் சகோதரி ஆகிய இருவரும், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். சம்பவத்தன்று, வீட்டில் இருந்த அஜய்க்கும் காந்திமதிக்கும், வாடகை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அஜய்யிடம் வீட்டை காலி செய்யுமாறு காந்திமதி கூறியுள்ளார்.
அப்போது அஜய், தான் அளித்த முன் பணத்தை கேட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அஜய், மூதாட்டியை தள்ளியுள்ளார்.
இதில் கீழே விழுந்த மூதாட்டியின் பின் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்து, உடலை ஹாலில் துாக்கில் தொங்கவிட்டு தப்பி சென்றார்.
இதற்கு, அவரது நண்பர் அன்வர் என்பவரும் உதவியுள்ளதாக தெரிகிறது. விசாரணைக்கு பின், முழு தகவல் தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.