ஜாமினில் வெளியே வந்த 'யூ - டியூபர்' மீண்டும் கைது
ஜாமினில் வெளியே வந்த 'யூ - டியூபர்' மீண்டும் கைது
ADDED : ஏப் 04, 2026 05:49 AM
சென்னை: வீட்டு உரிமையாளரை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த யூ - டியூபர் வராகி, குறிப்பிட்ட காலத்தில் சிறைக்கு திரும்பாததால், மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சென்னை தி.நகரில் வாடகைக்கு இருந்த வீட்டை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியதாகவும் வீட்டு பெண் உரிமையாளரை ஆபாசமாக பேசி மிரட்டியதாகவும் யூ -- டியூபர் வராகி, பாண்டி பஜார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், மிரட்டி பணம் பறித்தல், பெண்களிடம் ஆபாசமாக பேசி தொந்தரவு அளித்தல், போலி ஆவணங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 15 வழக்குகள் அவர் மீது உள்ளன. இதையடுத்து, அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய 3 மாத இடைக்கால ஜாமினில் வெளியே வந்த அவர், கடந்த மார்ச் 30ம் தேதி மீண்டும் சரணடையவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
