/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமற்ற உணவால் உடல் நலக்குறைவு; 'சொமேட்டோ' ரூ.30,000 வழங்க உத்தரவு
/
தரமற்ற உணவால் உடல் நலக்குறைவு; 'சொமேட்டோ' ரூ.30,000 வழங்க உத்தரவு
தரமற்ற உணவால் உடல் நலக்குறைவு; 'சொமேட்டோ' ரூ.30,000 வழங்க உத்தரவு
தரமற்ற உணவால் உடல் நலக்குறைவு; 'சொமேட்டோ' ரூ.30,000 வழங்க உத்தரவு
UPDATED : மே 27, 2025 06:09 AM
ADDED : மே 27, 2025 12:47 AM

சென்னை : சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜகபிரபு நாராயணசாமி என்பவர் தாக்கல் செய்த மனு:
வேளச்சேரியில், 'அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ்' உள்ளது. உணவு விநியோக நிறுவனமான, 'சொமேட்டோ' வாயிலாக, இந்த உணவகத்தின் சிறப்பு அசைவு உணவை வாங்க, 2024 ஜூலை 5ல் பதிவு செய்தேன்.
அந்த உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில், மூச்சுத்திணறல், தலை, மார்பு பகுதியில் இறுக்கம், மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட்டது.
தனியார் மருத்துவமனையில் இரண்டு நாள் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று, வீடு திரும்பினேன். சிகிச்சைக்கு, 18,129 ரூபாய் செலவானது.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பார்சல் செய்ய தகுதியற்ற பிளாஸ்டிக் பைககள் பயன்படுத்துவதாகவும், சுகாதரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாகவும், 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
தரமற்ற உணவகங்களை, தன் செயலி வாயிலாக பட்டியலிட்டு, வாடிக்கையாளரை வாங்க துாண்டுகின்றனர். உணவு விநியோக நிறுவன செயலால், வாடிக்கையாளரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
சொமோட்டா நிறுவனம், அர்ஜூன் மம்மி டாடி ஆந்திரா மெஸ் ஆகியோர், தனக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்புக்கு, 2.50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
'சொமோட்டோ' நிறுவனம், தங்கள் செயலியில் பொருட்களை விளம்பரப்படுத்தி, அப்பாவி நுகர்வோர் வாங்கத் துாண்டியது, தகவல் தொழில்நுட்பச் சட்ட பிரிவின் கீழ், அலட்சியத்திற்கு பொறுப்பாகும். பொருள் தயாரிப்பாளர் என்ற முறையில் உணவகமும் பொறுப்பாகும்.
சேவை குறைபாட்டுடன் செயல்பட்ட உணவகம், சொமோட்டா நிறுவனம் ஆகியோர் இணைந்து, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக, 25,000 ரூபாய்; வழக்கு செலவாக 5,000 ரூபாயை, இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால், 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.