/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிகாரி அறையை பூட்டிய மண்டல குழு தலைவர் கைது
/
அதிகாரி அறையை பூட்டிய மண்டல குழு தலைவர் கைது
ADDED : அக் 05, 2024 12:23 AM
செம்பாக்கம், தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலத்தில், சுயேச்சையாக வெற்றி பெற்ற ஜெயபிரதீப் என்பவர், மண்டல குழு தலைவராக உள்ளார்.
கடந்த 10 மாதங்களாக, மண்டலக்குழு கூட்டம் நடத்தப்படாததால், அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மண்டல உதவி செயற்பொறியாளர் ரகுபதியின் அறைக்கு, அக்., 1ம் தேதி மாலை, மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் பூட்டு போட்டார்.
இது தொடர்பாக, சேலையூர் காவல் நிலையத்தில், மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை, 20க்கும் மேற்பட்ட போலீசார், ஜெயபிரதீப்பை கைது செய்ய, அவரது வீட்டிற்கு சென்றனர்.
அப்போது, வீட்டில் அவர் இல்லை. மொபைல் போனை சுவிட்ச் - ஆப் செய்து தலைமறைவானார்.
போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று மதியம், ஜெயபிரதீப், சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, அரசு அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்தது, அதிகாரியின் அறைக்கு பூட்டு போட்டது என, மூன்று பிரிவுகளின் கீழ், ஜெயபிரதீப் மீது வழக்கு பதிந்த போலீசார், அவரை எச்சரித்து, காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.
மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப் கூறுகையில், ''மண்டலத்தில் முறைகேடுகள் நடக்கின்றன.
அதுகுறித்து கேள்வி கேட்டால், உதவி செயற்பொறியாளர் தகுந்த பதில் இல்லை,'' என்றார்.
அதிகாரிகளை வேலை செய்ய தடுத்தது, அறைக்கு பூட்டு போட்டது என, 3 பிரிவுகளின் கீழ், ஜெயபிரதீப் மீது வழக்கு பதியப்பட்டது.