ADDED : ஜூன் 12, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாதவரம்,சென்னை மாநகராட்சியின் மூன்றாவது மண்டலமான, மாதவரம் மண்டல அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாதவரம் பஜாரில் மண்டல அலுவலகம் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, 10 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில், மண்டல அலுவலகம் தற்காலிகமாக, மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள, சி.எம்.டி.ஏ., லாரி நிறுத்த வளாகத்தில் நேற்று முதல் மாற்றப்பட்டுள்ளது.