ADDED : செப் 22, 2024 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : அண்ணா பல்கலைக்கு உட்பட கல்லுாரிகளை, பல்வேறு மண்டலங்களாக பிரித்து, விளையாட்டு போட்டிகள்நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், முதலாவது மண்டலத்திற்கான வாலிபால் போட்டி, திருவள்ளூர், கவரைப்பேட்டை ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரி வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது.
இதில், மொத்தம் 17 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன. அனைத்து காலிறுதி போட்டிகள் முடிவில், கோஜன் பொறியில், வேலம்மாள் பொறியியல், ஏ.எம்.எஸ்., பொறியியல் மற்றும் பிரதியுஷா பொறியியல் ஆகிய நான்கு அணிகள், அரையிறுக்கு தகுதி பெற்றுள்ளன.