ADDED : ஜூலை 31, 2025 12:28 AM

தண்டையார்பேட்டைதுாய்மை பணியை தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி வழங்குவதை கண்டித்து, துாய்மை பணியாளர்கள், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
செங்கொடி சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில், துாய்மை பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டன.
இதுகுறித்து, சென்னை மாவட்ட பொதுச்செயலர் சீனிவாசலு கூறியதாவது:
தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கான சம்ப சம்பளம், 753 ரூபாயில் இருந்து, 878 ரூபாயாக உயர்த்தப்பட்டு நான்கு மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படவில்லை.
துாய்மை பணியை தனியார் மயமாக்குவதால், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணா நகர் மண்டலங்களில், 4,892 பணியாளர்கள் பாதிக்கப்படுவர். அவர்களின் சம்பளமும் குறைந்துவிடும்.
ராயபுரம் மண்டலத்தில் பணிபுரிந்து வந்த நிரந்தர துாய்மை பணியாளர்கள் நான்கு பேர், இன்று ஓய்வு பெறும் நாளில், தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு மாற்றி உள்ளனர். ஓய்வு நாளில் இடமாற்றம் சரியல்ல. மண்டலங்களில் துாய்மை பணியை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.