கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இலவச ஆலோசனை
கே.எம்.சி.எச்., மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இலவச ஆலோசனை
ADDED : செப் 04, 2026 08:54 AM
அ திநவீன ரோபோட்டிக் சிகிச்சை முறைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், கே.எம்.சி.எச்., மருத்துவமனை, இம்மாதம் 30ம் தேதி வரை, இலவச ஆலோசனை முகாமை, அவிநாசி ரோட்டில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடத்துகிறது.
கே.எம்.சி.எச்., ரோபோட்டிக் அறுவை சிகிச்சை துறையில் முன்னணி மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. பொது அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ரோபோட்டிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளை அதிகளவில் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.
எதிர்கால மருத்துவத்தின் முக்கிய அங்கமாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை உருவெடுத்து வரும் நிலையில், இத்தொழில்நுட்ப சிகிச்சை முறை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்வது அவசியம். இதற்காக, செப்., 30 வரை இலவச ஆலோசனை முகாம் நடத்தப் படுகிறது.
இதில், பல்வேறு சிக்கலான நோய்களுக்கு அனுபவம் வாய்ந்த ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் ஆலோசனைகளை பெறலாம். நோயாளிகளின் உடல்நிலை முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஏற்ற சிறந்த சிகிச்சை முறை குறித்து விளக்கப்படும்.
என்னென்ன நோய்களுக்கு? சிக்கலான ஹெர்னியா, பித்தப்பை, இரைப்பை (வயிறு), உணவுக்குழாய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் நோய்கள், செரிமான மண்டல (ஜி.ஐ.) புற்றுநோய், தைராய்டு மற்றும் நுரையீரல் நோய்கள், கருப்பை, நீர்க்கட்டி மற்றும் மகளிர் புற்றுநோய்கள், சிறுநீரகம், புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பை நோய்கள், சிறுநீரக மண்டல புற்றுநோய்கள் ஆகியவற்றுக்கு ஆலோசனை பெறலாம். ரோபோட்டிக் அறுவை சிகிச்சையில், பாதிப்பு உள்ள இடத்தை மிக தெளிவாக பெரிதாக்கி காட்டுவதால், மருத்துவர் துல்லியமாகவும், சுலபமாகவும் அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. மிக சிறிய அளவில் மட்டுமே தோலில் துளையிடப்படுவதால், தழும்புகள் பெரிதாக தெரியாது. பெரிய காயங்கள் இல்லாததால், வலியும், ரத்த போக்கும் மிக குறைவாக இருக்கும். உடலின் பிற திசுக்கள் பாதிக்கப்படாததால், நோயாளி விரைவில் குணமடைவார்.
மேலும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை அனைவருக்கும் கட்டாயம் அல்ல. நோயின் தன்மையை பொறுத்து மருத்துவர்கள் இதை பரிந்துரைப்பர். தகுதியான நோயாளிகளுக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு, கே.எம்.சி.எச்., மருத்துவமனையை நேரிலோ அல்லது 74788 87411 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
