/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.4.48 லட்சம் சிகரெட் பறிமுதல்
/
ரூ.4.48 லட்சம் சிகரெட் பறிமுதல்
ADDED : மே 08, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கம்போடியாவில் இருந்து கோவை வந்த விமானப் பயணிகளிடம் இருந்து ரூ.4.48 லட்சம் மதிப்பிலான சிகரெட்களை புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
சிங்கப்பூரில் வழியாக கம்போடியாவில் இருந்து கடந்த 5ம் தேதி, கோவைக்கு விமானம் ஒன்று வந்தது. இவ்விமானத்தில் வந்த இரு பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய புலனாய்வு பிரிவு போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்கள் உடமைக்குள் ரூ.4.48 லட்சம் மதிப்பிலான 26 ஆயிரத்து, 400 சிகரெட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

