/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 நாள் திட்ட சமூக தணிக்கை 10 ஊராட்சிகளில் இன்று துவக்கம்
/
100 நாள் திட்ட சமூக தணிக்கை 10 ஊராட்சிகளில் இன்று துவக்கம்
100 நாள் திட்ட சமூக தணிக்கை 10 ஊராட்சிகளில் இன்று துவக்கம்
100 நாள் திட்ட சமூக தணிக்கை 10 ஊராட்சிகளில் இன்று துவக்கம்
ADDED : செப் 02, 2024 01:55 AM
அன்னுார்;கோவை மாவட்டத்தில், 10 ஊராட்சிகளில், இன்று 100 நாள் வேலை திட்ட சமூக தணிக்கை துவங்குகிறது.
நூறு நாள் வேலை திட்டத்தில் கோவை மாவட்டத்தில், தினமும் 15,000 பேர் பணி புரிகின்றனர். இதுகுறித்து கோவை கலெக்டர் கிராந்தி குமார் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், கடந்த 2023-24ம் ஆண்டு செய்யப்பட்ட பணிகள் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 2016--17 முதல் 2021--22 வரையிலான செயல்பாடுகளை நான்கு நாட்கள் சமூக தணிக்கை செய்து, ஐந்தாவது நாள் கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
கூட்டத்தில், 100 நாள் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்து விவாதித்து, மக்களுக்கு எடுத்துக் கூறி, தீர்மானம் நிறைவேற்றி, போட்டோ ஆதாரத்துடன், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதில் அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில் வடக்கலூர், எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் வெள்ளானைப்பட்டி, சூலூர் ஒன்றியத்தில் அரசூர், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் அப்பநாயக்கன்பட்டி, மதுக்கரையில் மயிலேறி பாளையம், தொண்டாமுத்தூரில் நரசீபுரம், ஆனைமலையில் அர்த்தனாரி பாளையம், கிணத்துக்கடவில் கோதவாடி, பொள்ளாச்சி வடக்கில் கிட்டசூரம்பாளையம், பொள்ளாச்சி தெற்கில் மாக்கினாம்பட்டி, என பத்து ஊராட்சிகளில், இன்று (2ம் தேதி) சமூக தணிக்கை துவங்கி 5ம் தேதி வரை நடக்கிறது.
வரும் 6ம் தேதி காலை 11:00 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தணிக்கை அறிக்கை வாசிக்கப்படுகிறது.