/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
12 ஆண்டுகளாக தொடர்ந்து அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
/
12 ஆண்டுகளாக தொடர்ந்து அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
12 ஆண்டுகளாக தொடர்ந்து அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
12 ஆண்டுகளாக தொடர்ந்து அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 09, 2024 04:42 AM
மேட்டுப்பாளையம் : காரமடை சீளியூர் அரசு உதவி பெறும் பள்ளி, தொடர்ந்து 12 ஆண்டுகளாக, 12ம் வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.
காரமடை அருகே சீளியூரில் அரசு உதவி பெறும் தி துரைசாமி கவுடர் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2023--2024 கல்வியாண்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 53 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி தொடர்ந்து 12 ஆண்டுகளாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் 500க்கு மேல் 6 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் கூறுகையில், ஊரக பகுதியில் அமைந்துள்ள எங்கள் பள்ளியில், மாணவர்களின் கல்விக்காக அனைத்து ஆசிரியர்களும் அதிகம் உழைத்தனர். சிறப்பு வகுப்புகளை நடத்தி 100 சதவீதம் தேர்ச்சிக்கு உறுதுணை புரிந்தனர். தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளோம், என்றார்.