/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
/
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி சி.பி.எஸ்.இ., தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 13, 2024 11:39 PM
மேட்டுப்பாளையம்;சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம். பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
பிளஸ் 2
மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பில் சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 323 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அனைவரும் தேர்வு பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். விகாஸ் சவுத்ரி 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். காவியா ஸ்ரீ 488 மதிப்பெண்களும், லத்திகா, மித்ரா ஆகியோர் 487 மதிப்பெண்கள் பெற்று முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றனர்.
இப்பள்ளியில், 480 க்கு மேல் 14 மாணவர்களும், 470 க்கு மேல் 39 பேரும், 450 க்கு மேல் 90 பேரும், 400க்கு மேல் 194 மாணவர்களும் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு
சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 247 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். அனைவரும் தேர்வு பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். யுதிஸ் குமார் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். பிரணவ் 490, லக்சனா சிரின் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றனர்.
தேர்வில், 480க்கு மேல் பத்து பேரும், 470க்கு மேல் 25 பேரும், 450க்கு மேல் 60 பேரும், 400க்கு மேல் 142 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், செயலாளர் மோகன் தாஸ் மற்றும் பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் பாராட்டினர்.

