/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னூர் குளத்தில் 100வது வாரமாக களப்பணி ஏற்பாடு
/
அன்னூர் குளத்தில் 100வது வாரமாக களப்பணி ஏற்பாடு
ADDED : ஜூலை 06, 2024 07:31 PM
அன்னூர்:அன்னூர் குளத்தில், 100வது வாரமாக களப்பணி இன்று நடக்கிறது.
அன்னூரில் உள்ள 119 ஏக்கர் பரப்பளவு குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, அன்னூர் பேரூராட்சி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், குளம் சீரமைப்பு பணி, 2022 ஆக.,15ல் துவங்கியது.
ஒவ்வொரு வாரமும், ஞாயிறன்று குளம் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இதுவரை 400 மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. குளத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில், குப்பை கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது.
100வது வாரமாக, இன்று களப்பணி காலை 8:00 முதல் 10:00 மணி வரை நடக்கிறது. மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுதல், களைகள் அகற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளன. ஆர்வமுள்ளோர் களப்பணியில் பங்கேற்க, அழைப்பு விடுத்துள்ளனர்.