/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
110 பட்டாலியன், 75வது ஆண்டு துவக்க விழா
/
110 பட்டாலியன், 75வது ஆண்டு துவக்க விழா
ADDED : ஆக 20, 2024 11:53 PM

கோவை:110 பட்டாலியன், 75வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
கோவை புளியகுளம் ரெட் பீல்ட்ஸ் பகுதியில் உள்ள, 110 பட்டாலியன் முகாமில் நேற்று, 110 பட்டாலியன், 75வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதற்கு கர்னல் அரிஷ் தலைமை தாங்கினார். விழாவில், 110 பட்டாலியனில் உயிர் நீத்த, 13 வீரர்களின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து தனியார் கல்லுாரி மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் ராணுவ வீரர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து, 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
விழாவின் துவக்க விழாவையொட்டி இன்று ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. நாளை வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

