/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வரின் உத்தரவுக்கு காத்திருக்கும் 12 ஆயிரம் ஆசிரியர் குடும்பத்தினர்

ADDED : செப் 05, 2024 12:29 AM
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம்'' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. பணி நிரந்தரம் செய்யவில்லை. கடந்த 13 ஆண்டுகளாக மிகுந்த கஷ்டத்துடன், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம்.
இந்த ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். முதல்வரின் உத்தரவுக்காக, 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.