/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரைதளத்தில் பதிக்கலாம் 13 வகையான டைல்ஸ்!
/
தரைதளத்தில் பதிக்கலாம் 13 வகையான டைல்ஸ்!
ADDED : ஜூன் 01, 2024 12:50 AM

ஒவ்வொரு கட்டடத்துக்கும், தரைதளமே மிக முக்கியமாக கருதப்படுகிறது. அதனால் பல வகையான டைல்ஸ் பல்வேறு அளவுகளிலும், வண்ணங்களிலும், டிசைன்களிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தரைதளத்தில் பதிக்கும் ஓடுகள் அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும், அதிநவீன தொழில்நுட்பம் காரணமாக நீடித்து உழைக்கிறது.
தற்போது இதில் பல்வேறு கலைப் படைப்புகளும், தற்போது இடம் பெற்றுள்ளது. வீடு மற்றும் வர்த்தக கட்டடங்களுக்கும், வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும், அழகான டைல்ஸ் தேர்வு செய்யலாம்.
வீடுகளின் தளங்கள், விளக்குகள் முதல் அலங்காரங்கள் வரை, அனைத்தும் ஒரு கலைத் திறமையை நவீன தொழில்நுட்பத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.
சமையலறை, குளியலறை, படுக்கையறை, உணவு அருந்தும் அறை உள்ளிட்ட அறைகளுக்கு, தனித்தனியாக டைல்ஸ் தேர்வு செய்யலாம்.
தரை தளத்திற்கு 13 வகையான ஓடுகள் உள்ளன. பீங்கான், கண்ணாடி, சீமெந்து, பளிங்கு, மொசைக், கிரானைட், சுண்ணாம்பு, டிராவர்டைன், குவாரி, உலோக, மரவகை, மொராக்கோ இப்படி 13 வகை டைல்ஸ் உள்ளது. இவற்றை விருப்பத்துக்கு தகுந்தாற்போல், தேர்வு செய்து பதித்துக்கொள்ளலாம்.

