/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை, திருப்பூரில் 'நீட்' தேர்வு 15 ஆயிரம் மாணவர்கள் ரெடி
/
கோவை, திருப்பூரில் 'நீட்' தேர்வு 15 ஆயிரம் மாணவர்கள் ரெடி
கோவை, திருப்பூரில் 'நீட்' தேர்வு 15 ஆயிரம் மாணவர்கள் ரெடி
கோவை, திருப்பூரில் 'நீட்' தேர்வு 15 ஆயிரம் மாணவர்கள் ரெடி
ADDED : மே 03, 2024 12:35 AM
கோவை:கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 26 மையங்களில், 15 ஆயிரம் மாணவர்கள் நாளை மறுதினம் (5ம் தேதி) நடக்கும் நீட் தேர்வை எழுத உள்ளனர்.நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை மறுதினம் நடக்க உள்ளது. நாடு முழுவதும், 557 நகரங்களில் பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:20 மணி வரை இத்தேர்வு நடக்க இருக்கிறது. இத்தடன், 14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடக்கிறது. மொத்தம் 24 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தெந்த நகரங்களில் தேர்வு மைய கூடங்கள் உள்ளது என்ற விவரம் கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது.நாளை மறுதினம் நடக்க உள்ள தேர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று பகுதிகளிலும் சேர்த்து, 26 மையங்களில் தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வை, 15 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
இதற்காக மூன்று தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தேர்வுகள் சிறப்பான முறையில் நடக்க, தடையில்லா மின்சாரம், மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதி செய்யப்பட்டுள்ளது. போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.