/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சசி கிரியேட்டிவ் கல்லுாரியின் 15வது ஆண்டு விழா நிகழ்ச்சி
/
சசி கிரியேட்டிவ் கல்லுாரியின் 15வது ஆண்டு விழா நிகழ்ச்சி
சசி கிரியேட்டிவ் கல்லுாரியின் 15வது ஆண்டு விழா நிகழ்ச்சி
சசி கிரியேட்டிவ் கல்லுாரியின் 15வது ஆண்டு விழா நிகழ்ச்சி
ADDED : ஆக 28, 2024 11:28 PM

கோவை : கோவை மைலேரிபாளையம் சசி கிரியேட்டிவ் கல்லூரியின், 15வது ஆண்டு விழா நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கியூபாய்டு ஆர்கிடெக் நிறுவனத்தின் நிறுவனர் கமலஹாசன் ராமசாமி பேசுகையில், ''மாணவர்கள் படிக்கும்போதே தங்களுடைய படிப்பை மெருகேற்றும் வகையிலும், தற்போதுள்ள வேலைவாய்ப்புகள், முதுநிலை படிப்புகளை அறிந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
விழாவுக்கு, கல்லூரி நிர்வாக அறங்காவலர் ராஜ்தீபன் சுவாமிநாதன் தலைமை வகித்தார். அறங்காவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லூரியில் படிப்பு, வருகை பதிவேடு, பல்கலை அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. சிறந்த பேராசிரியர்கள் நான்கு பேருக்கு 5,000 ரூபாய் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.