/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
17 சவரன் தங்க நகைகள் ரொக்கம் திருட்டு
/
17 சவரன் தங்க நகைகள் ரொக்கம் திருட்டு
ADDED : ஆக 22, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : கோவைபுதூரில் வசிப்பவர் தியானேஸ்வர், 31; தனியார் நிறுவன திட்ட மேலாளர். இவரது மனைவி தனது நகைகளை பீரோவில் வைத்திருந்தார். கடந்த மே மாதம் விசாகபட்டினம் சென்றுள்ளார். 28ம் தேதி தனது நகைகளை எடுத்து வருமாறு, தியானேஸ்வரனிடம் கூறியுள்ளார். தியானேஸ்வரன் பீரோவில் பார்த்தபோது, நகைகள், ரொக்கம் மாயமாகியிருந்தது.
குனியமுத்தூர் புலனாய்வு பிரிவு போலீசில், தியானேஸ்வரன் கொடுத்த புகாரில், பீரோவிலிருந்த, 17 சவரன் தங்க நகைகள், 30 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் திருட்டு போயிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் மொத்த மதிப்பு, ரூ. 5. 4 லட்சம். போலீசார் விசாரித்து வருகின்றனர்.