sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் நடப்பாண்டு 13,977 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்; 10,868 பேர் கைது

/

கோவையில் நடப்பாண்டு 13,977 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்; 10,868 பேர் கைது

கோவையில் நடப்பாண்டு 13,977 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்; 10,868 பேர் கைது

கோவையில் நடப்பாண்டு 13,977 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்; 10,868 பேர் கைது


ADDED : செப் 01, 2024 11:07 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தமிழக போலீஸ் டி.ஜி.பி., சங்கர் ஜிவால், கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி., சரவணசுந்தர் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி எஸ்.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் கடந்த 30 மற்றும் 31ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தினார்.

சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கோவை சரக போலீஸ் அதிகாரிகளுடன் கோவை சரகத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை கண்டறியவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும், கணிணி வழி குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தக்க நிவாரணம் பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சாலை விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்துபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கோவை சரகத்தில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம், பதுக்கி வைத்து மதுவிற்பனை, ரவுடிகள் தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்தார். அதன்படி நடப்பாண்டில் கோவை சரகத்தில், 675 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் 749 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து, 738 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய, 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 36 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து, 1731 இடங்களில் சோதனை செய்ததில், 1294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளில், 1300 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து, 12,916 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 725 கடைகள் போலீசாரால் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் வாயிலாக சீல் வைக்கப்பட்டது. அதேபோல, கல்வி நிறுவனங்களின் அருகில் உள்ள, 7367 கடைகளில் சோதனை செய்து, குட்கா விற்பனை செய்த கடைகளைக் கண்டறிந்து, 11 பேரை கைது செய்து, 323 கிலோ குட்கா பறிமுதல் செய்து, 9 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுவிற்பனை செய்தவர்கள் மீது கோவை சரகத்தில், 8722 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 8808 பேர் கைது செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து, 102 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ச்சியாக குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த, 23 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 109 வாகனங்களை ஏலம் விடுவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை சரகத்தில், இவ்வாண்டு, 698 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தை பிணைப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. நன்னடத்தை பிணையை மீறியதற்காக, 3 ரவுடிகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலிலிருந்து பிணையில் வெளியில் வந்த, 24 ரவுடிகளின் பிணையை ரத்து செய்து, பிடிக்கட்டளை நிலுவையில் உள்ள ரவுடிகளுக்கு ஜாமீன் கொடுத்த, 9 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த, 27 ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகளின் சொத்துக்களின் மீது நிதி விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட, 4 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு ரவுடிக்கு கடுங்காவல் தண்டனையும் கோர்ட்டில் பெறப்பட்டுள்ளது.

இவைகளை ஆய்வு செய்த டி.ஜி.பி., கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை முடக்கவும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்திய புதிய சட்டத்தின்படி உரிய வழக்குகளை பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ரவுடிகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அவர்களை கண்காணிப்பதற்காக தனி போலீசார் அடங்கிய குழுவை அமைத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் அறிவுரை வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றியதற்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

போலீஸ் கட்டடங்கள் குறித்து ஆலோசனை

கோவை சரகத்தில் புதிதாக கட்டப்படும் போலீஸ் குடியிருப்புகள், போலீஸ் ஸ்டேஷன் பராமரித்தல் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் பழுதுகளை கண்டறிந்து அவைகளை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.



ஸ்மார்ட் காவலர் ஆப் நெறிப்படுத்த அறிவுரை

கோவை சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் குற்ற சம்பங்களை தடுத்து சட்டம் - ஒழுங்கை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கு, போலீசாரின் ரோந்து பணி, குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் அழைப்பாணையை சார்பு செய்யும் பணி, நீதிமன்ற பணி மற்றும் போலீசாரின் அன்றாட பணிகளை இதற்காக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் காவலர் ஆப் வாயிலாக முறையாக நெறிப்படுத்த அறிவுரைகள் வழங்கினார்.








      Dinamalar
      Follow us