/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசாருக்கு 2 கி.மீ., ரன்னிங் சேலஞ்ச்!
/
போலீசாருக்கு 2 கி.மீ., ரன்னிங் சேலஞ்ச்!
ADDED : மே 04, 2024 12:29 AM

கோவை;போலீசாருக்கு, 2 கிலோ மீட்டர் ரன்னிங் சேலஞ்ச் துவங்கப்பட்டது.
கோவை மாநகர போலீசில் பணிபுரிந்து வரும் போலீசாரின் உடல் நலனையும், மனநலனையும் மேம்படுத்த, 'தொடர்ந்து, 48 நாட்கள் ஒரு பயிற்சியை மேற்கொண்டால், அது அவர்களுக்கு ஒரு பழக்கமாக மாறிவிடும்' என்று, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தி இருந்தார்.
அதன்படி, 48 நாட்களுக்கான, 2 கிலோ மீட்டர் ரன்னிங் சேலஞ்ச் மற்றும், 15 நிமிட நினைவாற்றல் திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
இதில் கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும், 40 ஆண் போலீசாரும், 20 பெண் போலீசாரும் என மொத்தம், 60 போலீசார், 2 கிலோ மீட்டர் துாரம் ஓடினர். 10 நிமிடங்கள் தியானம் செய்தனர். இந்த பயிற்சி, நேற்று முதல் தொடர்ச்சியாக, 48 நாட்கள் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர் சேகர், மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர், மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.