/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புளி வாங்கி, ரூ.3.92 லட்சம் மோசடி: இருவர் சிறையிலடைப்பு
/
புளி வாங்கி, ரூ.3.92 லட்சம் மோசடி: இருவர் சிறையிலடைப்பு
புளி வாங்கி, ரூ.3.92 லட்சம் மோசடி: இருவர் சிறையிலடைப்பு
புளி வாங்கி, ரூ.3.92 லட்சம் மோசடி: இருவர் சிறையிலடைப்பு
ADDED : மே 08, 2024 12:30 AM
கோவை:புளி வாங்கி ரூ.3.92 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், தேத்தாக்குடியை சேர்ந்தவர் மகாராஜன், 40. இவர் அதே பகுதியில், மாம்பழம், புளி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இவரை, விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்., நகரை சேர்ந்த சந்தோஷ், 43, கோவை செல்வபுரத்தை சேர்ந்த கருப்புசாமி, 32, கோபி ஆகிய மூவரும் தொடர்பு கொண்டனர். மூவரும், நான்கு டன் அளவு புளி வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து மகாராஜனும், நான்கு டன் புளியை கோவையை எடுத்து வந்து, சாய்பாபா காலனி முன் மூவரின் வாகனத்தில் அனுப்பி வைத்தார்.
இதற்காக கோபி, ரூ.3.92 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தார். அந்த காசோலையை மகாராஜன், வங்கியில் செலுத்த சென்றார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மூவரும் மேலும், மூன்று டன், புளி வேண்டும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து மேலும், 3 டன் புளியை அவர்களிடம் மகாராஜன் கொடுத்தார். இதற்கான பணத்தை எடுத்து வருவதாக கூறி மூவரும் அங்கிருந்து மாயமாகினர். ஆனால், அவர்கள் வரவில்லை. மகாராஜன் அவர்களை தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லை. மேலும், அவர்கள் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இன்றி திரும்பியது. இதுகுறித்து மகாராஜன் சாய்பாபா காலனி போலீசாரிடம் புகார் அளித்தார்.
வழக்கு பதிந்த போலீசார் சந்தோஷ், கருப்புசாமி, ஆகிய இருவரையும் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கோபியை தேடி வருகின்றனர். இருவரிடம் இருந்தும், 300 கிலோ புளி, ரூ.30 ஆயிரம், இரு மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

