/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகளை தடுக்க 2 குழுக்கள் 24 மணி நேரமும் ரோந்து
/
யானைகளை தடுக்க 2 குழுக்கள் 24 மணி நேரமும் ரோந்து
ADDED : ஆக 23, 2024 12:35 AM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில், யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க, 2 குழுக்கள் வாயிலாக சுழற்சி முறையில், 24 மணி நேரமும் வனத்துறையினர் ரோந்து செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட சமயபுரம், நெல்லித்துறை, ஊட்டி சாலை, ஓடந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டுப்பன்றிகள், மான்கள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது. தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சமயபுரம் மற்றும் ஊட்டி சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளன. யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், 'யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் இருக்கவும், விளைநிலங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சமயபுரம் மற்றும் ஊட்டி, கோத்தகிரி சாலைகளில் இரண்டு குழுவினர், சுழற்சி முறையில் 24 மணி நேரமும், ரோந்து செல்கின்றனர்.
இவர்கள் வனத்தில் இருந்து யானைகள் வெளியே வருகிறதா என கண்காணித்து, வெளியே வரும் யானைகளை மீண்டும் வனத்துக்குள் அனுப்பி வருகின்றனர். வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால், விவசாயிகள், பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.---

