/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
201 விநாயகர் சிலைகள் 'ரெடி' சூலுார் தாலுகாவில் இன்று பிரதிஷ்டை
/
201 விநாயகர் சிலைகள் 'ரெடி' சூலுார் தாலுகாவில் இன்று பிரதிஷ்டை
201 விநாயகர் சிலைகள் 'ரெடி' சூலுார் தாலுகாவில் இன்று பிரதிஷ்டை
201 விநாயகர் சிலைகள் 'ரெடி' சூலுார் தாலுகாவில் இன்று பிரதிஷ்டை
ADDED : செப் 07, 2024 02:44 AM
சூலுார்;சூலூர் தாலுகாவில், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், 201 விநாயகர் சிலைகள் இன்று பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.
சூலூர் தாலுகாவில் உள்ள கருமத்தம் பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில், 63 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
சூலூரில் இந்து முன்னணி சார்பில், 41 இடங்களிலும், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 25 இடங்களிலும், வீர இந்து சேனா சார்பில், 6, இந்து மக்கள் கட்சி சார்பில், 2 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் இன்று காலை துவங்குகின்றன.
சுல்தான்பேட்டை வட்டாரத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், 43 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் வாகனங்களில் எடுத்து வந்து, பிரதிஷ்டை செய்யும் இடங்களில் இறக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.