தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா

அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா

அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா


ADDED : ஜூலை 14, 2026 04:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 04:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தடாகம்: தடாகம் ரோடு, அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில், 21வது பட்டமளிப்பு விழா முதல்வர் மனோன்மணி தலைமையில் நடந்தது. 

சிறப்பு விருந்தினர் ஜி.எஸ்.டி. மற்றும் சுங்கத்துறை இயக்குனர் செந்தில்வேலவன் பேசுகையில், ‘‘இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் இலக்கை அடைவதில் இளம் பொறியாளர்களின் பங்கு முக்கியமானது. அறிவு, திறமை, புதுமை மற்றும் நேர்மையுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும்,' என்றார்.

தொடர்ந்து, முதுகலைப்பிரிவில் 11 மற்றும் இளங்கலைப்பிரிவில் 9 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 678 மாணவர்களுக்கு விழாவில்  பட்டம் வழங்கப்பட்டது.

‘‘இக்கல்லுாரியில் படித்த மாணவர்களில் 140 நிறுவனங்களில் 84 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தாண்டு வேலைவாய்ப்பு பெற்றனர். 140க்கு மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றனர்,’’ என்றார் முதல்வர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us