/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
24 மணி நேர திட்ட குடிநீர் குழாயில் கசிவு
/
24 மணி நேர திட்ட குடிநீர் குழாயில் கசிவு
ADDED : டிச 07, 2024 06:32 AM

கோவை; கோவை, மசக்காளிபாளையம் ரோட்டில், 24 மணி நேர குழாயில் நேற்று குடிநீர் கசிவு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி, 53வது வார்டில், 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது. இதில், மசக்காளிபாளையம் ரோடு வாரச்சந்தை கூடும் பகுதியில் உள்ள இணைப்புகளுக்கு நேற்று குடிநீர் சப்ளை செய்யப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், ஒரு இடத்தில் கசிவு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. செம்மண் கலந்து தண்ணீர் ரோட்டில் வழிந்தோடியதால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்ளை நிறுத்தப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மசக்காளிபாளையம் பகுதியில், 24 மணி நேர திட்டத்தில், 3,000 இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு இணைப்பாக தண்ணீர் வருகிறதா என ஆய்வு செய்யப்படும். குழாயை சீரமைத்ததும் ரோடு போட்டுக் கொடுக்கப்படும்' என்றனர்.