/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சப் -- ரிஜிஸ்டர் காரில் ரூ.2.80 லட்சம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
/
சப் -- ரிஜிஸ்டர் காரில் ரூ.2.80 லட்சம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
சப் -- ரிஜிஸ்டர் காரில் ரூ.2.80 லட்சம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
சப் -- ரிஜிஸ்டர் காரில் ரூ.2.80 லட்சம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
ADDED : ஆக 07, 2024 11:10 PM

பெ.நா.பாளையம்:கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் சப் - ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பத்திரப்பதிவில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதற்கு சில நிமிடங்களுக்கு முன், பெரியநாயக்கன்பாளையம் சப் - ரிஜிஸ்டர் அருணா, வாடகை கார் ஒன்றில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது தெரிந்தது. இதையறிந்த போலீசார், 1 கி.மீ.,யில் அருணா பயணித்த வாடகை காரை சுற்றி வளைத்தனர்.
அந்த காரை சோதனையிட்ட போது, அதில், 2.80 லட்ச ரூபாய் இருந்தது; போலீசார் அதை கைப்பற்றினர். காருடன் அருணாவை மீண்டும் சப் ரிஜிஸ்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு, 8.00 மணிக்கு துவங்கிய விசாரணை விடிய, விடிய நேற்று காலை, 7.00 மணி வரை தொடர்ந்தது.
இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி., திவ்யா கூறுகையில், ''அருணா பயணித்த காரில் இருந்து கைப்பற்றப்பட்ட, 2.80 லட்சம் ரூபாய் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் இழைத்த நபர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும். யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தொடர்ந்து நடக்கிறது,'' என்றார்.