/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோத்தகிரியில் பஸ் கவிழ்ந்து சுற்றுலா பயணியர் 32 பேர் காயம்
/
கோத்தகிரியில் பஸ் கவிழ்ந்து சுற்றுலா பயணியர் 32 பேர் காயம்
கோத்தகிரியில் பஸ் கவிழ்ந்து சுற்றுலா பயணியர் 32 பேர் காயம்
கோத்தகிரியில் பஸ் கவிழ்ந்து சுற்றுலா பயணியர் 32 பேர் காயம்
ADDED : மே 03, 2024 10:11 PM

மேட்டுப்பாளையம்,:சென்னை பெரம்பூர், கொளத்துார், சூரப்பேட்டை பகுதிகளில் இருந்து, அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும், 16 பேர் தங்கள் குழந்தைகள் 15 பேருடன், ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் கடந்த, 30ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், மேட்டுப்பாளையம் வந்தனர். ஏற்கனவே, ஆன்லைனில் பதிவு செய்திருந்த மினி பஸ்சில், மே 1ம் தேதி ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்.
இரண்டு நாட்களாக ஊட்டியில் சுற்றிப் பார்த்த இவர்கள், மேட்டுப்பாளையத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிப்பதற்கு, நேற்று மாலை, 5:00 மணிக்கு மினி பஸ்சில் மேட்டுப்பாளையம் நோக்கி, கோத்தகிரி மலைப்பகுதி சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர்.
கோத்தகிரி சாலை மலைப்பகுதியில், பவானிசாகர் அணை காட்சிமுனை வளைவில், எதிர்பாராத விதமாக பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 15 சிறுவர், சிறுமியர் உட்பட, 31 பேர் காயமடைந்தனர். டிரைவருக்கும் காயம் ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக, கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.