/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் களமிறங்கும் 37 பேர் :இறுதி வேட்பாளர் பட்டியல் 'ரிலீஸ்'
/
கோவையில் களமிறங்கும் 37 பேர் :இறுதி வேட்பாளர் பட்டியல் 'ரிலீஸ்'
கோவையில் களமிறங்கும் 37 பேர் :இறுதி வேட்பாளர் பட்டியல் 'ரிலீஸ்'
கோவையில் களமிறங்கும் 37 பேர் :இறுதி வேட்பாளர் பட்டியல் 'ரிலீஸ்'
ADDED : மார் 30, 2024 11:59 PM
கோவை;கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நான்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், ஏழு பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள், 26 சுயே., வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிட, 53 வேட்பாளர்கள், 59 வேட்பு மனுக்கள் வழங்கியிருந்தனர். பரிசீலனையின் போது, 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 41 வேட்பு மனுக்கள் தகுதியானவையாக ஏற்கப்பட்டன.
போட்டியில் இருந்து வாபஸ் பெற நேற்று மாலை, 3:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் மற்றும் மூன்று சுயே., வேட்பாளர்கள், நேற்று வாபஸ் பெற்றனர்.
பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயே., வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின், சின்னங்களுடன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
37 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், வரப்போகும் தேர்தலில், மூன்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதன் விபரம்:
அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்கள்
1. கே.அண்ணாமலை - பா.ஜ., - தாமரை
2. சிங்கை ஜி.ராமச்சந்திரன் - அ.தி.மு.க., -இரட்டை இலை
3. கணபதி பி.ராஜ்குமார் -தி.மு.க., - உதயசூரியன்
4. க.வேல்முருகன் - பகுஜன் சமாஜ் கட்சி - யானை
பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளர்கள்
5. எஸ்.ஆனந்தகுமார் - ராஸ்டிரிய சமாஜ் பக்சா கட்சி - ரெப்ரிஜிரேட்டர்
6. ஜெ.கலாமணி - நாம் தமிழர் கட்சி - மைக்
7. அ.குமார் - இந்திய கண சங்கம் - வெண்டைக்காய்
8. ரா.சங்கீதா - நாடாளும் மக்கள் கட்சி - ஆட்டோ
9. வீ.புஷ்பானந்தம் - தமிழக முற்போக்கு மக்கள் கட்சி - காஸ் சிலிண்டர்
10.கே.ராகுல்காந்தி - ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி - ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை
11.ரிச்சர்ட் வின்சென்ட் - வீரோ கே வீர் இந்தியன் கட்சி - கிரிக்கெட்மட்டை
சுயேட்சை வேட்பாளர்கள்
12.இரா.அண்ணாதுரை - டார்ச் லைட்
13.வே.அருண்காந்த் - மணற்கடிகை
14.த.கார்த்திக் - அமிழ்சுருள்
15.வெ.கிருஷ்ணன் - தென்னைந்தோப்பு
16.செ.கோபாலகிருஷ்ணன் - ஸ்கூல் பேக்
17.எஸ்.சஞ்சய்குமார் - இஞ்சி
18. க.சண்முகம் - கப்பல்
19.மோ.சுரேஷ் - காலிபிளவர்
20.கே.சூர்யகுமார் - கம்ப்யூட்டர்
21.கு.தினேஷ் - கிணறு
22.ஆ.துரைசாமி - வாளி
23.ஏ.நுார்முகமது - ஹெல்மெட்
24.எஸ்.பசுபதி - பெட்டி
25.மா.பழனிசாமி ராஜ் - ரப்பர் ஸ்டாம்ப்
26.ப.பிரேம்குமார் - மோதிரம்
27.பூபாலன் - தாழ்ப்பாள்
28.பி.பி.முத்துசாமி - குடை மிளகாய்
29.ரவிச்சந்திரன் - ஷூ
30.எம்.ராமச்சந்திரன் - மின்கம்பம்
31.இரா.ராமச்சந்திரன் - கேரம் போர்டு
32.நா.ராஜமாணிக்கம் - செங்கல்
33.கோ.ராஜ்குமார் - லேப்டாப்
34.கோ.பா.ராஜ்குமார் - கேக்
35.எம்.ராஜ்குமார் - திராட்சை
36.ராஜ்குமார் - வைரம்
37.ஜாகீர் உசேன் - பலாப்பழம்

