சி.டி.சி.ஏ., கிரிக்கெட் கிரிஷ்வந்திற்கு 5 விக்கெட்
சி.டி.சி.ஏ., கிரிக்கெட் கிரிஷ்வந்திற்கு 5 விக்கெட்
ADDED : ஜூன் 06, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் நான்காவது டிவிஷன் போட்டி சூர்யபாலா சி.ஜி., பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது.
ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கிரிக்கெட் கிளப் அணியினர் 40.5 ஓவரில் 118 ரன் எடுத்தனர். விக்னேஷ் 50 ரன் எடுத்தார். எதிரணியின் கிரிஷ்வந்த் ஐந்து விக்கெட், சந்தோஷ் மூன்று விக்கெட் வீழ்த்தினர். சூர்யபாலா அணியினர் 16 ஓவரில் 119 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். கதிர்வேலு 82 ரன் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.
