/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களின் தாகம் தீர்க்க 50 தண்ணீர் பந்தல்கள்
/
மக்களின் தாகம் தீர்க்க 50 தண்ணீர் பந்தல்கள்
ADDED : மே 01, 2024 11:45 PM

கோவை : மக்கள் தாகத்தை தணிக்கும் வகையில், 50 இடங்களில் தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம், 100 டிகிரியை தாண்டி மக்களை வாட்டி வதைக்கிறது.
இதையடுத்து, அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகிப்பதுடன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் குடிநீர் வசதிகளை ஏற்படுத்த நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் மண்டலத்துக்கு, 10 வீதம், 50 எண்ணிக்கையிலான தண்ணீர் மற்றும் நீர் மோர் பந்தல்கள் முக்கிய சந்திப்புகளில் அமைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சரவணம்பட்டி பிரதான சந்திப்பில், அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலில், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

