தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 671  உரமாதிரிகள் தரமற்றவை

671  உரமாதிரிகள் தரமற்றவை

671  உரமாதிரிகள் தரமற்றவை


ADDED : ஜூன் 25, 2026 10:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்செல்வி  கூறியதாவது:-

தரமான ரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கில், கோவை தடாகம் சாலையில், வேளாண்மை இணை இயக்குநர் வளாகத்தில் செயல்பட்டு வரும் உரக்கட்டுபாட்டு ஆய்வகம், ரசாயன உரங்களை பரிசோதனை செய்து வருகிறது. பகுப்பாய்வின் போது, உரங்களின் பேரூட்ட சத்துக்கள் மற்றும் இராண்டாம் நிலை சத்துகளின் அளவுகள், உரக்கட்டுப்பாட்டு ஆணை படி உள்ளதா என கண்டறியப்படுகிறது. மேலும், கன உலோகங்களின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு மிகாமல் உள்ளனவா எனவும் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில், 15,831 உரமாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தியதில்,  671 உரமாதிரிகள் தரமற்றவை எனக் கண்டறியப்பட்டு, துறை மற்றும் சட்ட ரிதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வாகத்தில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டண முறையில் ரசாயன உரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us