/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அடிவாரத்தில் 7 மி.மீ., மழை
/
சிறுவாணி அடிவாரத்தில் 7 மி.மீ., மழை
ADDED : மே 08, 2024 12:41 AM
கோவை:சிறுவாணி அடிவாரத்தில் நேற்று முன்தினம் இரவு, 7 மி.மீ., மழை பெய்துள்ளது சற்று ஆறுதலையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் சிறுவாணி அணை கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி என்ற நிலையில் மழை இல்லாததால், 11அடிக்கும் குறைவாகவே தண்ணீர் இருக்கிறது.
வரும் ஜூன் இரண்டாவது வாரம் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் தினமும், 3 கோடி லிட்டர் அளவுக்கு சராசரியாக தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் வெப்பச்சலனம் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. சிறுவாணி அடிவாரத்தில், 7 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. நீர் மட்டம், 10.25 அடியாக இருந்த நிலையில் குடிநீர் தேவைக்காக, 3.3 கோடி லிட்டர் தண்ணீர் நேற்று எடுக்கப்பட்டது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'சிறுவாணி அடிவாரத்தில் மட்டும், 7 மி.மீ., மழை பெய்தது. அணைப்பகுதியில் மழை பெய்யவில்லை. இரு நாட்களில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

