/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
78வது சுதந்திர தின விழா; கோலாகலமாக கொண்டாட்டம்
/
78வது சுதந்திர தின விழா; கோலாகலமாக கொண்டாட்டம்
ADDED : ஆக 15, 2024 11:31 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, தேசியக்கொடியேற்றினார். சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, வருவாய்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
* சின்னேரிபாளையம் சுவஸ்திக் மெட்ரிக் பள்ளியில் நடந்த விழாவில், தாளாளர் தீபா தலைமை வகித்தார். பள்ளி ஆசிரியர் மஞ்சுளா, சுதந்திர தின விழா குறித்து பேசினார். விழாவையொட்டி, 'ஐ லவ் இந்தியா' என்ற வாசக வடிவில் வரிசையாக நின்று மாணவர்கள் தேசபக்தியை வெளிப்படுத்தினர். மாணவர்கள் மாறுவேட போட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆசிரியர்கள் வனிதாமணி, கலைவாணி ஒருங்கிணைத்தனர்.
* திம்மங்குத்து ரைஸ் பள்ளியில், மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி நிர்வாகத்தினர் பங்கேற்றனர். அனந்தநாராயணன், விசாலாட்சி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
* ஜமீன் ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இந்திய கடற்படையின் கமண்டோ டேனியல் ராஜன், தேசியக்கொடியேற்றினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாளாளர் அருட்தந்தை கமேஸ் ஜோசப், அருட்தந்தை பினு ஏசுதாஸ், அருட்தந்தை சிஜின் ஆண்டனி, பள்ளி முதல்வர் மேக்டலின், துணை முதல்வர் சத்திய சந்தான கவுரி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* பக்கோதிபாளையம் தொடக்கப்பள்ளியில், தலைமையாசிரியர் ஜேக்கப்பால் மாணிக்கராஜ், தேசியக்கொடியேற்றினார்.
* சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் முதல், மூன்று மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் அமைப்பான ஸ்டார் அசோசியேஷன் சார்பாக, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
*வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் நடந்த விழாவில், துணை உடற்கல்வி இயக்குனர் சரண்யா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பிரபாகர் தேசியக்கொடியேற்றினார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் தாமோதரன், மாணவர்களுக்கு சுதந்திர தின உறுதிமொழி எடுத்து வைத்தார். தேசிய மாணவர் படை அலுவலர் திருசெல்வன் நன்றி கூறினார்.
* சந்தேகவுண்டன்பாளையம் துவக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், தேசியக்கொடியேற்றினார். தலைமையாசிரியர் அமுதராணி வரவேற்றார். மாணவர்களுக்கான நடனங்கள், விளையாட்டு, பேச்சு போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ேஹமலதா, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். 3ம் வகுப்பு மாணவி தமிழ்பாரதி, இயற்கை பற்றியும், 5ம் வகுப்பு மாணவர் திக் ஷீத், கல்வி பற்றியும் பேசினர். ஆசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.
* சோமந்துறை தொடக்கப்பள்ளியில், ஆனைமலை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் விசாலாட்சி தலைமை வகித்தார். டாக்டர் ஜென்சியா பேகம் முதலுதவி பெட்டியை வழங்கினார். கண்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் நாச்சிமுத்துக்கு பரிசு வழங்கப்பட்டது. ராகவேந்திரா மக்கள் இயக்க நிறுவனர் செந்தில், ஆர்த்தி மற்றும் பலர், மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
* பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில், மூத்த வக்கீல் சுந்தரராஜ், தேசியக்கொடியேற்றினார். சங்க தலைவர் துரை, மூத்த வக்கீல்கள் பங்கேற்றனர்.
கிணத்துக்கடவு
* கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் தேன்மொழி தேசியக்கொடி ஏற்றினார். பி.டி.ஏ. தலைவர் கனகராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். கல்வி, விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
* மெட்டுவாவி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மயிலாத்தாள், ஊராட்சி தலைவர் பூவதி, ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, ஓவியம், மாறுவேடம், நாடகம் போன்ற போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
* நெ.10.முத்தூர் நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் நர்மதா தேசியக்கொடி ஏற்றினார். ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வால்பாறை
* வால்பாறை கோர்ட் வளாகத்தில், மாஜிஸ்திரேட் மீனாட்சி தேசியக்கொடியேற்றி இனிப்பு வழங்கினார். வக்கீல்கள் ஷாநவாஸ்கான், பெருமாள், விஸ்வநாதன், முத்துசாசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் விநாயகம் தலைமையில், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தேசியக்கொடி ஏற்றினார். காந்திசிலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கவுன்சிலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.
* வால்பாறை நுாலகத்தில், நுாலகர்கள் தனபாலன், வேலுச்சாமி ஆகியோர் தேசியக்கொடி ஏற்றி, வாசகர்களுக்கு இனிப்பு வழங்கினர். நகராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர், ரவிசந்திரன், மணிகண்டன், ஒப்பந்ததாரர் ரமேஷ்ராஜா ஆகியோர் புரவலராக இணைந்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர், நுாலகத்திற்கு இருக்கைகள் வழங்கினார்.