/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அணைகளில் 90 சதவீதம் தண்ணீர் இருப்பு; மின் நிலையங்களில் தேவைக்கேற்ப உற்பத்தி

ADDED : செப் 08, 2024 04:45 AM

ஊட்டி,: நீலகிரி அணைகளில், 90 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் இருப்பதால் தேவைக்கேற்ப மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டம் குந்தா, பைக்காரா மின் வட்டத்தில், உள்ள, 12 மின் நிலையங்கள் மூலம், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. குந்தா மின் வட்டத்தில் மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும், அவலாஞ்சி அணை, 171 அடி, எமரால்டு அணை,184 அடி கொண்டதாகும். இங்கு தேக்கி வைக்கப்படும் தண்ணீர் குந்தா, கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. தென் மேற்கு பருவமழையில் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. எமரால்டு, அவலாஞ்சி அணையில் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது.
குந்தா, பைக்காரா மின் வட்டத்தில் உள்ள பிற அணைகளிலும், 90 சதவீதம் அளவுக்கு நீர் மட்டம் இருப்பில் உள்ளது. அணைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பில் இருப்பதால், தினசரி, 500 முதல், 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தி அதிகரிப்பால் ஈரோடு, மதுரை மற்றும் சென்னையில் உள்ள மின் மையத்திற்கு சீராக மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.